Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி போடும் ஆறடி ஆப்பிள் அழகி.. ஹிட் இல்லனாலும் மனுஷன் வாழ்றாருயா!
விஜய் சேதுபதி வெற்றி என்ற ஒன்றை பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது. விஜய்சேதுபதி படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அதே நிலைமைதான். வில்லனாக கலக்கினாலும் ஹீரோவாக தடுமாறுகிறார்.
இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களை விரட்டி விரட்டி வாய்ப்பு கொடுத்து வருகிறாராம்.
அடுத்ததாக விஜய் சேதுபதி பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோருடன் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை தான்.
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி என்பதால் அவரும் செம ஹாப்பியா இருக்கிறாராம். அதே சமயத்தில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக வலம்வரும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம்.
பாதியில் கைவிடப்பட்ட படங்கள், ஃபெயிலியர் இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் என தொடர்ந்து தமிழ் சினிமாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஐசரி கணேஷ். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம்.
இன்னும் இயக்குனர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால் அந்த படத்தில் தமிழ் சினிமாவில் ஆறடி ஆப்பிள் ஆக அனைவரது மனதிலும் இடம்பிடித்த அனுஷ்கா நடிக்க உள்ளாராம்.
அனுஷ்கா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில் எதுக்கு வழிய வந்ததை விட வேண்டும் என விஜய் சேதுபதி பட வாய்ப்பை பிடித்து கொண்டாராம்.
