fbpx
Connect with us

Cinemapettai

முதன்முறையாக 5 மொழிகளில் 150 நாடுகளில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதன்முறையாக 5 மொழிகளில் 150 நாடுகளில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து விறுவிறுவென முன்னணி நடிகராக வளர்ந்து வந்தவர் விஜய் சேதுபதி. கதை பிடித்திருந்தால் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவும் தயங்க மாட்டார்.

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் ஒரே நடிகர் என்றால் இவரைக் கூறலாம். கைவசம் கிட்டத்தட்ட 5 படங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு இந்தியாவே அறியப்படும் நாயகனாக மாறி விட்டார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் க/பே ரண சிங்கம். இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜிப்ரான் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான அழகிய சிறுக்கி பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காப்பேர் என சிங்கம் படத்தின் உரிமையை ஜி ஃப்ளெக்ஸ் எனும் குழுமம் பெற்றுள்ளது. ஐந்து மொழிகளில் கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு மேல் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் க/பே ரண சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

ka-pae-ranasingam-on-zeeplex

ka-pae-ranasingam-on-zeeplex

Continue Reading
To Top