விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை மற்றும் றெக்க ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதுமட்டுமல்லாமல் கே.வி.ஆனந்த் படம் வட சென்னை என இவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்திலும் இவர்தான் ஹீரோவாம். இந்த படம்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது