விஜய் சேதுபதியை திட்டி விரட்டிய மிஸ்கின்.. பின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்!

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் தனது தனித்துவமான நடிப்பை நிரூபித்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு சரியில்லை என்று பிரபல இயக்குனர் மிஸ்கின் திட்டி விரட்டிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

2010-ல் மிஸ்கின் இயக்கத்தில் நந்தலாலா என்ற படம் வெளிவந்தது. இந்தப்படத்தின் நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் போது விஜய் சேதுபதி நடிப்பை பார்த்து திட்டி அனுப்பி விட்டாராம் மிஸ்கின்.

இதனால் மன வேதனை அடைந்த விஜய்சேதுபதி அடுத்தடுத்து வரும் சின்ன சின்ன பட வாய்ப்புகளின் மூலம் வெற்றியும் கண்டார். தன்னை ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்டார்.

மிஸ்கின் படப்பிடிப்பின் போது மிகுந்த கோபத்தில் தான் இருப்பார், இவருக்கும் இளையராஜாவுக்கும் இடையே சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார் மிஸ்கின்.

எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துக் கொண்டாராம். அதை விட தரமான சம்பவம் என்வென்றால் படப்பிடிப்பு முடிந்த பின் இறுதி நாளில் விஜய் சேதுபதி மிஸ்கின் காலில் விழுந்ததைப் பார்த்து மிரண்டு போய் விட்டதாம் படக்குழு.

pisasu2-cinemapettai
pisasu2-cinemapettai

புகழின் உச்சியில் இருக்கும் விஜய் சேதுபதி இப்படி ஒரு காரியம் செய்ததைப் மிஷ்கினும் எதிர்பார்க்கவில்லை. பல வருடங்களுக்கு முன் அவமானப்படுத்தியும், திறமைக்கு மதிப்பு கொடுத்து இயக்குனரிடம் வாழ்த்து பெற்று சென்றாராம் விஜய்சேதுபதி. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்