8 படம் நடிச்சு என்ன பிரயோஜனம், ஒன்னும் ரிலீசாகல.. பஞ்சாயத்தில் சிக்கித் தவிக்கும் விஜய் சேதுபதி

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தபோதும் ரிலீஸ் செய்ய முடியாமல் பல படங்கள் தடுமாறுகிறது.

விஜய் சேதுபதி தற்போது கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். படத்திற்கு ஏற்ப, தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்ப அவரது சம்பளங்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

இது ஒருபுறமிருக்க விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, அனபெல்லா சுப்பிரமணியம், மாமனிதன், கடைசி விவசாயி என ஏகப்பட்ட படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

ஆனால் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களில் ஒரு படமான சங்கத்தமிழன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்ததால் தற்போது விஜய் சேதுபதியின் மார்க்கெட் அநியாயத்திற்கு அடி வாங்கியுள்ளது.

அவரது படங்கள் பெரிய வியாபாரம் செய்வதில்லை என்ற ஒரு கருத்து இருந்தும் வருகிறது. இருந்தாலும் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்ததால் அந்த படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததை தனக்கு சாதகமாக்கி பல படவாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதனால் விஜய் சேதுபதியின் மற்ற மொழி படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றால்தான் அந்த படத்தை வைத்து இந்த படங்களுக்கு வியாபாரம் செய்யமுடியும் என தயாரிப்பாளர்கள் தவித்து வருவதாக வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர்.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்