Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல சேனலில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ் படம்.. அதுவும் விஜய் சேதுபதியின் படம்
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய படம் ஒன்று நேரடியாக டிவி சேனலில் ஒளிபரப்பு செய்யவுள்ள செய்தி தமிழ் சினிமா தியேட்டர்காரர்களை தகிடதோம் ஆட வைத்துள்ளது.
சமீபத்தில் கேரளாவில் பிரபல நடிகராக வலம் வரும் டோவினோ தோமஸ் நடித்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் என்ற படம் நேரடியாக டிவி சேனலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதேபோல் விஜய் சேதுபதி நடித்த படம் ஒன்று டிவி சேனலில் நேரடியாக வெளியாக உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கா/பே ரணசிங்கம். இந்த படத்தின் OTT உரிமையை jee5 நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகின்ற காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி விஜய் சேதுபதியின் கா/பே ரணசிங்கம் படம் நேரடியாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாம். OTTயில் வெளியான பிறகு ஜீ தமிழ் சேனலில் அன்றைக்கே எதிர்பார்க்கலாம்.
அதேபோல் கா/பே ரணசிங்கம் படத்தை ஜீ 5, ஜீ பிளக்ஸ் போன்ற OTT தளங்களிலும் அக்டோபர் 2ம் தேதி வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
