4 வருடங்களாக காத்திருந்த விஜய் சேதுபதியின் படம்.. போட்டிக்கு களமிறங்கும் 5 படங்கள்!

கொரோனா பாதிப்பினால் ஒரு சில வருடங்களாக திரையரங்கிற்கே வர தயங்கிய சினிமா பிரியர்கள், தற்போது அந்த பயத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு குடும்பத்தோடு தியேட்டர்களில் அலை அலையாக குவிகின்றனர். இதனால் பட விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்த திரையரங்கில் படங்களை ஆர்வத்துடன் ரிலீஸ் செய்கின்றனர். அதிலும் தற்போது ஒரே நாளில் முன்னணி கதாநாயகர்களின் ஐந்து படங்களை வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ்  செய்து எந்த படத்தைப் போய் பார்ப்பது என ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர்.

மாமனிதன்: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கும் மாமனிதன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு திரைப்படத்தின் முழு பணிகளும் முடிந்த நிலையில் ரிலீஸ் செய்ய காலதாமதம் ஆனது. மூன்று மொழிகளில் வெளியாகும் மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போட்ட நிலையில் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பட்டாம்பூச்சி: பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி கதாநாயகனாகவும், ஜெய் வில்லனாகவும் நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆன பட்டாம்பூச்சி படத்தின் டிரைலர் சமீபத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதில் ஜெய் மற்றும் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கும் சுந்தர் சி-யுடன் உடன் ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வேழம்: நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கேசவன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சந்தீப் ஷியாம் இயக்கியிருக்கிறார். திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஜானகி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் அசோக் செல்வனுக்கு ஜோடியாக 2 கதாநாயகியாக நடித்திருக்கிறார். அன்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும் தேடி ஒரே சமயத்தில் தேடி சென்றால் என்ன நடக்கும், என்ன கிடைக்கும் என்பதுதான் என்ற படத்தின் மையக்கரு. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி ரிலீஸாகிறது.

மாயோன்: அருள்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள இந்தப் படத்தை, கிஷோர் இயக்கர் சிபிராஜ், தன்யா, எஸ் ரவிகுமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதைகள் இந்த படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

கடமையை செய்: கணேஷ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்ராமன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா உள்ளிட்டோர் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரை சிம்பு வெளியிட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தை குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்: கலையரசன்-ஆனந்தி ஜோடி சேர்ந்திருக்கும் இந்தப்படத்தில் இவர்களுடன் காளி வெங்கட், மதுமிதா, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தை ஜானகிராமன் இயக்க, சி.வி. குமார் தயாரித்துள்ளார். இந்த படம் பள்ளி காதல், கல்லூரி காதல், வேலைக்கு செல்லும்போது உள்ள காதல், திருமணத்திற்கு பிறகு காதல் என நான்கு காதலர்களை மையமாக கொண்டுஉருவாக்கியுள்ளது, பல நாட்களாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் வரும் ஜூன் 24ஆம் தேதி ரிலீஸாகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்