Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கும் எனக்கும் 10 வயது தான் வித்தியாசம்.. அம்மாவாக நடிக்க முடியாது என வாய்ப்பை உதறிய நடிகை

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தமிழ், தெலுங்கு அனைத்திலும் வசூலை வாரி குவித்து வருகிறது. அதனாலேயே விஜய் சேதுபதிக்கு அதிகமான மார்க்கெட் சினிமாவில் உள்ளது.

தற்போது இயக்குனர்கள் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க முன்வருவது மட்டுமில்லாமல் பல துணை நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி பிரபல நடிகையான ஒருவர் விஜய் சேதுபதி நடிக்க எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி என கூறியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ் அரண்மனை மற்றும் வேதாளம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மீரா கிருஷ்ணன். தற்போது இவர் விஜய்சேதுபதியுடன் நடிப்பதற்கு ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

meera krishnan

meera krishnan

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் எனக்கும் அவருக்கும் வெறும் 10 வயசுதான் வித்தியாசம் என்னை போய் அவருக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறீர்கள் என அந்த வாய்ப்பை வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பதற்கான ஆசை எனக்கு உள்ளது. ஆனால் அதற்கு தகுந்தது போல் கதை இருக்க வேண்டும், மேலும் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் உள்ளது போல் இருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Continue Reading
To Top