விஜய் சேதுபதி நடித்த படத்தின் தலைப்பை மாற்றிய படக்குழு.. அதுவும் என்ன பெயர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குனர்களாலும் விரும்பப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என பாகுபாடு பார்க்காமல் தன்னைத் தேடி வரும் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து கொடுப்பதாலோ என்னவோ இவரது கால்ஷீட் டைரி நிறைந்து வழிகிறது. அந்த அளவிற்கு ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் வெளிவராமல் உள்ள நிலையில் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படம் விநாயகர் சதுர்த்தியன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது.

vijaysethupathi
vijaysethupathi

இப்படத்திற்கு அனபெல் சுப்ரமண்யம் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் வெளியாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் படத்தில் ஒரு சிறிய மாற்றமாக படத்தின் தலைப்பு அனபெல் சேதுபதி என்று மாற்றப்பட்டுள்ளதாம். அதேபோல் படத்தில் விஜய் சேதுபதியின் பெயரும் வீர சுப்ரமண்யம் என்பதற்கு பதிலாக வீர சேதுபதி எனவும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்