நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழுக்கு வரும் பிரபல நடிகர்… அதுவும் விஜய் சேதுபதி படத்தில்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் ஏற்கனவே டஜன் கணக்கில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் சந்தீப் கிஷன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு மட்டும் கால்ஷீட் பிரச்சினையே வராதா என கோலிவுட் நடிகர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் இணைந்து நடிக்க உள்ள புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தை புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க உள்ளார்.

பேமிலி மேன்’ சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே கூட்டணி இப்படத்தை வெளியிட உள்ளனர். சௌத்ரி என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். ஆக்ஷன் என்டென்டெயினராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Sundeep Kishan

விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் குல்லி ரவுடி என்ற தெலுங்கு படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக மாயவன் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் விரைவில் புதிய படத்திற்காக இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்