திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

விஜய் சேதுபதி-க்கு சர்வதேச அளவில் கிட்டும் அங்கீகாரம்.. இது தான் உண்மையான வெற்றி

ஒரு பக்கம் பயங்கரமான ப்ரோமோஷன் காரணமாக ஒரு சில படங்கள் ஓடுகிறது. இன்னொரு பக்கம், ப்ரோமோஷன் பெரிய அளவில் இல்லையென்றாலும், சத்தமே இல்லமால் வெற்றி பெற்று, சாதித்து காட்டுகிறது.

ஒரு படம் Technical-ஆக ஸ்ட்ரோங் ஆக இருப்பதை விட முக்கியம் கதை மற்றும் திரைக்கதையில் ஸ்ட்ரோங் ஆக இருக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக வரும் படங்கள் பார்க்க பிரம்மாண்டமாக இருக்கிறதே, தவிர கதை ஒன்றும் இல்லை என்று தான் தோன்றுகிறது.

அப்படி தான் தேவரா கங்குவா போன்ற படங்கள் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு படங்களும் technical ஆக ஸ்ட்ரோங் ஆன படங்கள். ஆனால் தேவரா படத்தில், கதை இல்லை. கங்குவா படத்தில் திரைக்கதை சரி இல்லை. அதே நேரத்தில், மகாராஜா, லப்பர் பந்து போன்ற கம்மி பட்ஜெட் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படங்களாக உள்ளது.

விஜய் சேதுபதி-க்கு கிடைத்த சர்வதேச கவுரவம்

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மஹாராஜா. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.

இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ம் தேதி வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தை அலிபாபா குழுமம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான, கதை சார்ந்த, சிறிய பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக ‘மகாராஜா’ பட வெற்றி அமைந்திருக்கிறது. கதை தான் முக்கியம், என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த படம். இது விஜய் சேதுபதிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம்

- Advertisement -

Trending News