Connect with us
Cinemapettai

Cinemapettai

ranasingam-vijatsethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? ப்ளூ சட்டை மாறனுக்கு சவால் விடுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படம் ஒரு சில தினத்திற்கு முன்பு ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.

இந்த சூழலில், யூடியூப் சேனலில் படங்களை விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், க/பெ.ரணசிங்கம் படத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சித்து ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரின் கோபத்தை சம்பாதித்துள்ளார்.

இவருடைய விமர்சனத்திற்கு க/பெ.ரணசிங்கம் படத்தின் அறிமுக இயக்குனரான விருமாண்டி உச்சக்கட்ட கோபத்தில் காண்டாகி சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் “வேலைவாய்ப்பு, வறுமையின் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களின் கதிக்கு யார் காரணம்? என்று யோசிக்க வைக்கக் கூடிய இந்தப் படத்தை பார்த்து குறட்டை விட்டு தூங்க வைப்பதாக விமர்சிப்பவர்களின் பெருமூளை மழுங்கி மட்டமாகிவிட்டது!.

அதுமட்டுமல்ல ஒரு பெண் தனது கணவன் மீது கொண்டிருக்கும் அபரிவிதமான பாசத்தை ஒருசில வரிகளில் உங்களைப்போன்ற அதிமேதாவிக்கு புரிய வைக்க முடியாது.

தைரியம் இருந்தா, நேரலை விவாதம் செய்யலாம்!” என்று ஆவேசமாக ப்ளூ சட்டை மாறனுக்கு சவால் விடுத்துள்ளனர் க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குனர்.

ஏற்கனவே, திரையரங்கில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் OTT தளத்தில் ரிலீஸ் செய்து வெற்றிக்காக காத்திருக்கும் படக்குழுவினரை சீண்டினால் சும்மா இருப்பார்களா? என்று ரசிகர்களும் தங்கள் ஆதரவை படக்குழுவுக்கு அளித்து வருகின்றன.

ka-pae-ranasingam-cinemapettai

ka-pae-ranasingam-cinemapettai

Continue Reading
To Top