Connect with us
Cinemapettai

Cinemapettai

vijaysethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய், கமலை அடுத்து டாப் நடிகருக்கு வில்லனான விஜய் சேதுபதி.. எகிறும் தெலுங்கு மார்க்கெட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது தமிழில் டஜன் கணக்கில் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் ஒரே தமிழ் நடிகர் விஜய் சேதுபதி மட்டும்தான்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பென்னா படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் விஜய் சேதுபதியின் மார்கெட் எகிற தொடங்கியது. தற்போது புதிய தெலுங்கு படங்களில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு முன்வந்து கொண்டிருக்கின்றனர். தமிழை விட தெலுங்கில் விஜய்சேதுபதிக்கு அதிக மார்க்கெட் நிலவி வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல கன்னட நடிகர் கோபிசந்த் மாலினேனி இப்படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

vijay-sethupathi-cinemapettai

vijay-sethupathi-cinemapettai

மேலும் இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு இன்னும் முடிவடையவில்லை. சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். தற்போது விக்ரம் படத்தில் கமல் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top