Connect with us
Cinemapettai

Cinemapettai

ஓடிடி ரிலீசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி.. லாபம் கிடைக்குமா பார்க்கலாம்.!

vijay sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓடிடி ரிலீசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி.. லாபம் கிடைக்குமா பார்க்கலாம்.!

தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இவர் நடிப்பில் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளதால் விஜய்சேதுபதி ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனென்றால் பல படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டுப் பெற்றதால் இப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் 2015ஆம் ஆண்டு உருவான புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி ஜெகநாதன் தான் லாபம் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷ்ருதி ஹாசன், ஹரிஷ் உத்தமன், சாய் தன்ஷிகா போன்ற பலர் நடித்துள்ளனர். லாபம் படத்தின் இறுதி வேலைகள் மற்றும் டப்பிங் வேலைகள் முடித்துள்ளனர்.

அதையடுத்து டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இப்படத்தை நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் உரிமை பெற்றதால் இப்படம் ஆன்லைன் தான் வெளியாகும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய்சேதுபதி இப்படத்தை கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மாஸ்டர் படம் பொங்கலுக்கு விரைவில் வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் இப்படம் எந்த மாதம் வெளியாகும் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Vijay Sethupathi

எப்படி இருந்தாலும் விஜய் சேதுபதி திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவது உறுதியாகி விட்டது என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top