Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதியின் மாஸ் கெட் – அப் போட்டோ !
சயீரா நரசிம்ம ரெட்டி
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிம்மாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம்.

nayanthara
இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், டாக்டர் ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சுரேந்தர் ரெட்டி இயக்கவிருக்கும் இந்த படத்தினை ராம் சரண் தயாரிக்கிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட்டின் அமித் திரிவேதி இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்துவருகிறது.

vijay sethpathi sudeep
இந்நிலையில் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கிச்சனா சுதீப்பின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ பிரபல நாளிதழில் வெளியாகி உள்ளது.
