‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனருடன் மீண்டும் சேர்ந்து “ஜூங்கா” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்றும் , சுமார் 20 கோடி பொருட்ச்செலவில் தயார் ஆகும் அப்படத்தின் தயாரிப்பாளரும் விஜய் சேதுபதி தான் என்று நம் தளத்தில் முன்பே தெரிவித்து இருந்தோம்.

இப்படம் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த மாஸ் படமாக இருக்கும் என்றும் , படத்தின் 60% ஷூட் பிரான்சில் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார் பட இயக்குனர் கோகுல். இந்த படத்தில் கதாநாயகியாக வனமகன் புகழ் சாயீஷா நடிக்கிறர்.

காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதி ஆகியுள்ளது. தனி காமெடி ட்ராக் என்று இல்லாமல் படம் முழுக்க, சேதுபதியுடன் வருவது போல் இவரின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஏற்கனவே ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரித்தவர் நம்ப விஜய் சேதுபதி தானுங்க