Connect with us
boomerang-movie

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி ! போட்டோ உள்ளே !

News | செய்திகள்

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி ! போட்டோ உள்ளே !

செக்க சிவந்த வானம்

மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்தது தயாரிக்கும் படம் “செக்க சிவந்த வானம்”.இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , மாடல் டயானா எர்ரப்பா மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே.

CCV

ஏற்கனவே சிம்பு, அரவிந்த் சாமி, அதிதி ராவ் போன்றவர்களின் கெட் – அப் போட்டோக்கள் வெளியாகி வைரலானது. மிக வேகமா நடந்து வந்த இந்த மல்டி – ஸ்டார்கள் நடிக்கும் படம் சினிமா தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்போது சினிமா வேலைநிறுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்‘ படத்தின் படப்பிடிப்பும் நேற்று துவங்கியது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி முதன் முதலாக கலந்துகொண்டுள்ளார். இவரின் போட்டோவை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகின்றது.

Vijay Sethupathi CCV

திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். கிரேட்டிவ் இயக்குனராக பிஜோய் நம்பியார். ஏகா லஹானி உடை வடிவமைப்பு. கலை கவனிப்பது ஷர்மஷிதா ராய்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top