Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி போட்ட தரமான இசையமைப்பாளர்.. அதுவும் இந்த படத்தில்?
ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட ஐந்து படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
ஹீரோவாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார். வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் நடிகர் என்றால் அது இவர் மட்டும்தான்.
அந்த வகையில் தற்போது முத்தையா முரளிதரன் என்றே கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர்.
ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும்போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக வலம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதைப் பயன்படுத்தி பின்னாளில் நன்றாக கல்லா கட்ட முடிவு செய்துவிட்டார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான மெல்லிசை மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களுக்கு இசையமைத்த சாம் சி எஸ் இசையமைக்க உள்ளார்.
இதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்புகள் இப்போதே அதிகமாகி விட்டது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
