Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்ப்பரேட்டுக்கு கைகொடுக்கும் விஜய் சேதுபதி.. சங்கத் தமிழருக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகர் என்ற நிலையில் தற்போது முன்னணியில் இருப்பவர் விஜய் சேதுபதி. எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பே அவரின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக விஜய்சேதுபதி மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்த பலசரக்கு வியாபாரங்களுக்கான மண்டி என்ற மொபைல் ஆப் ஒன்றுக்கு விளம்பரத் தூதராக நடித்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத வணிக வியாபாரிகள், ஒரு தமிழன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலியாக மாறுவது மிகவும் வேதனை அளிக்கிறது எனவும், மேலும் விஜய் சேதுபதி உடனடியாக அந்த விளம்பரத்தில் இருந்து விலகுமாறு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் 2 வாரத்தில் சங்கத்தமிழன் பட வெளியீட்டை வைத்துக்கொண்டு இது இவருக்கு தேவையா? என தயாரிப்பு நிறுவனம் தலையில் அடித்துக் கொள்கிறது.
