News | செய்திகள்
விஜய் சேதுபதிக்கு ஊட்டி விட்ட லிட்டில் சூப்பர்ஸ்டார்… வைரலாகும் புகைப்படம்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன் சாப்பாடு ஊட்டி விட்ட புகைப்படம் தான் இணையத்தின் இன்றைய ஹாட் டாக்.

ccv
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் செக்க சிவந்த வானம். அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா புரோடக்ஷன் நிறுவனமும் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஒரு மாஸ் ஹீரோ என்றாலே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் இத்தனை நாயகர்கள் என்பதால் படத்தின் அறிவிப்பு அன்றே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு காணப்பட்டது.
இந்த வருட முதலிலே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு தள்ளி போனது. இதை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்க போராட்டம் என பல காரணங்களால் லேட்டாகி சமீபத்தில் தான் இப்படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் முதல்முறையாக கலந்து கொண்டவர் சிம்பு. அவரின் காட்சிகள் பாதி எடுக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் மக்கள் செல்வனின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சூடுப்பிடித்து இருக்கும் இப்படப்பிடிப்புகளின் சில ப்ளாக் அண்ட் வொயிட் படங்கள் ரிலீஸாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறடித்து வருகிறது.

str
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஸ்பூனால் சோறு ஊட்டும் சிலம்பரசனின் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இன்றைய வைரலாக இருக்கும் இப்படம் கலராக வெளியிடப்பட்டு இருப்பதால், சும்மா போஸிற்கா இல்லை படத்தில் இருக்கும் காட்சியா என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
