Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘நீங்க என்ன ஆளுங்க?’ என்று கேட்ட தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி சொன்ன காட்டமான பதில் என்ன தெரியுமா ?
விஜய் சேதுபதி
துணை நடிகனாக சினிமா வாழ்க்கையை தொடக்கி, ஹீரோ அவதாரம் எடுத்தவர். தன் ஆஸ்தான இயக்குனரால் மக்கள் செலவன் என்ற ஆடை மொழியையும் வாங்கியவர். பல ஜானர்களில் படம் நடித்து இன்று கோலிவுட்டில் மகா நடிகன் என்ற பெயரும் வாங்கிவிட்டார்.

Vijay Sethupathi seethakathi
இப்படி படங்கள், எவ்வாறு கால்- ஷீட் தருகிறார். மனிதர் தூங்குவாரா, வீட்டிற்கு செல்வாரா என்றெல்லாம் பல கேள்விகள் நம்முள் . இவர் நடிப்பில் வெளியாகும் 25 வது படம் சீதக்காதி.
இந்நிலையில் விஜய் சேதுபதி 25வது படத்தை கடந்ததற்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது, அதில் ரமேஷ் திலக் தான் இந்த விஷயத்தை பகிர்ந்ததாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றது.

Ramesh_Thilak
“தம்பி நீங்க என்ன ஆளுங்க” என்று கேட்ட தயாரிப்பாளரிடம், “எந்திரிச்சு வெளில போயா, நீ எனக்கு படம் கொடுக்கிறாயா, என் ஜாதிக்கு கொடுக்கிறாயா?” என்று கோபமாக பேசி அனுப்பிவிட்டதாக்க அவர் கூறினாராம்.
