vijay sethupathi in rekka

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இது அரசியல் சார்ந்த படம் என்றும், இப்படத்தில் விஜய்சேதுதி வழக்கறிஞராக நடிக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இதை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது.