Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
மாஸ்டர் இடைவேளை காட்சியில் விஜய்யின் மாஸ் பன்ச் வசனத்தை பேசுவாராம் சேதுபதி
மாஸ்டர் – தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை.சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாஸ்டர் மஹேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி முன்னிட்டு சன் டிவியின் யூ ட்யூப் சானலில் இந்த டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் இது நம்மவர் ஸ்டைல், மலையாள பட சாயல் தெரிகிறது என்றெல்லம் பேசி வருகின்றனர். எனினும் மாஸ் ஸ்டைலிஷாக விஜயை காமித்துள்ள காரணத்தால் இந்த டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
டீஸர் பார்க்கும் பொழுதே ஆக்ஷன் படம் என்பது பக்காவாக தெரிகின்றது. இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் ஆக்ஷன் காட்சிகள் கட்டாயம் பட்டயகிளப்பும் என்பது புரிகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் இன்டெர்வல் கட்சி பற்றிய விஷயம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது தளபதி ரசிகர்ளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதவாது விஜய் அவர்களின் ட்ரேட்மார்க் பன்ச் வசனம் ஆகிவிட்டது “I AM WAITING ” . துப்பாக்கி, கத்தி, சர்கார் என இந்த வசனம் இடம் பெற்றுள்ளது.
மாஸ்டர் படத்தில் தனக்கே உரிய நக்கல் ஸ்டைலில் மக்கள் செல்வன் ” இந்த வசனத்தை நீங்கள் சொன்ன பழசு, அதனால நானே சொல்றேன் I Am Waiting ” என்பது போல அமைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

vijay sethupathi in master
