Connect with us
Cinemapettai

Cinemapettai

2 வருடமாக கிடப்பில் கிடந்த விஜய் சேதுபதி படம் ரிலீசுக்கு ரெடி.. அந்த படமா இது, மறந்தே போச்சு!

vijay-sethupathi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2 வருடமாக கிடப்பில் கிடந்த விஜய் சேதுபதி படம் ரிலீசுக்கு ரெடி.. அந்த படமா இது, மறந்தே போச்சு!

விஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் வெளியிட முடியாமல் தடுமாறி வந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பிரபல இயக்குனர்களுடன் கூட்டணி வைத்தால் அந்த படம் சூப்பர்ஹிட் அடிக்கும் என்ற சம்பிரதாயம் இருந்து வருகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல, மற்ற மொழி சினிமாக்களும் பொருந்தும்.

அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி ஆகியோரது கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். இவர்கள் கூட்டணியில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்தது. இதில் மாமனிதன் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் மாமனிதன் பஞ்சாயத்து தற்போது ஒரு வழியாக முடிந்து மீண்டும் வெளியீட்டுக்கு தயாராகி விட்டதாம். பெரும்பாலும் OTT ரிலீசாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சினிமா வாசிகள்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவரது ஆஸ்தான நாயகி காயத்ரி நடித்துள்ளார். மேலும் மாமனிதன் படத்திற்காக முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

maamanithan-cinemapettai

maamanithan-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top