kadhalum-kadanthu-pogumசூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் 327 திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவால் இப்படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ. 2.55 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படம் தமிழக அரசின் வரிச்சலுகை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களிலேயே இது தான் முதல் நாளில் அதிக வசூலாம்.