Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேடிவரும் நண்பர்களை விரட்டி விடும் விஜய்சேதுபதி.. அவருக்கு என்ன கஷ்டமோ!
ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
ஹீரோவாக நடித்தால் ஒரு கட்டத்தில் மண்ணை கவ்வி விடுவோம் என தெரிந்து அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வருவதைவிட வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் தேடி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சம்பளமும் அதிகம்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் ஆரம்பகால வெற்றி படங்களை கொடுத்த பல இயக்குனர்கள் அதன்பிறகு தோல்வி படங்களை கொடுத்து கேட்பாரற்று கிடக்கிறார்கள். விஜய் சேதுபதியும் நட்புக்காக பல படங்கள் திரும்ப அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
ஆனால் அனைத்துமே தோல்வி தான். விஜய் சேதுபதி ஹிட் என்ற வார்த்தையை கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. இந்த சமயத்தில் தோல்விப் படங்களைக் கொடுத்த தன்னுடைய நண்பர்களை எப்படி வேண்டாம் என்று சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
அதே நேரத்தில் அவர்கள் கொண்டுவரும் கதையை படமாக பண்ணுவதை விட வெப் சீரியஸாக பண்ணுங்கள் என அட்வைஸ் செய்து வருகிறாராம்.
