fbpx
Connect with us

Cinemapettai

5 வருடமாக கிடப்பில் கிடக்கும் விஜய் சேதுபதி இயக்குனரின் படம்.. ஒருவழியாக OTT ரிலீஸ் அறிவிப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 வருடமாக கிடப்பில் கிடக்கும் விஜய் சேதுபதி இயக்குனரின் படம்.. ஒருவழியாக OTT ரிலீஸ் அறிவிப்பு

சினிமாவில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை ஒரு படத்தின் மொத்த வேலைகள் முடிந்து சில பல பிரச்சனைகளால் படத்தை வெளியிடாமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள்.

அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் ஒருவரின் அடுத்த படம் இன்னும் கரைசேர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ் ரசிகர்களிடையே விஜய் சேதுபதியை அடையாளப்படுத்திய திரைப்படம் என்றால் அது நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம்தான்.

2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகுதான் விஜய் சேதுபதி என்ற வித்தியாசமான நடிகர் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அந்த படத்தை கொடுத்த பாலாஜி தரணிதரன் என்பவரின் அடுத்த படம்தான் ஒரு பக்க கதை. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மற்றும் மெகா காஷ் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய இந்த படம் சில பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு வழியாக ஜீ5 என்ற OTT தளத்திற்கு இந்த படத்தை விற்று விட்டார்களாம்.

செப்டம்பர் 25-ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறாராம் பாலாஜி தரணிதரன்.

Continue Reading
To Top