வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மாரிமுத்துவின் கடைசி பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.. ஒரே படத்தில் ரெண்டு குணசேகரன்

Vijay Sethupathi-Marimuthu: எதிர்நீச்சல் தொடரின் மூலம் ஒட்டு மொத்த சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர் மாரிமுத்து. குணசேகரன் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். அதுவும் வில்லனாக நடித்த ஒருவருக்கு இப்படி ஒரு வரவேற்பா என பலரும் பிரமிக்க செய்திருந்தால் மாரிமுத்து. சினிமாவில் பல இன்னல்களை சந்தித்து வந்தவர்தான் மாரிமுத்து.

படிப்படியாக வளர்ந்த தனது 57வது வயதில் தான் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக மிரட்டி வந்தார். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது மரணம் அவரை சூழ்ந்து கொண்டது. இந்த சூழலில் அடுத்த ஆதி குணசேகரனாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த வகையில் இப்போது நடிகர் வேலராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

Also Read : புது குணசேகரனால் தடுமாறும் சன் டிவியின் டிஆர்பி.. எதிர்நீச்சல் கிடாரியை பலி கொடுக்க நேரம் வந்தாச்சு

மேலும் மாரிமுத்து கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நடித்த படத்தின் கடைசி போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார். அதாவது நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வீராயி மக்கள் என்ற படத்தில் மாரிமுத்து மற்றும் வேலராமமூர்த்தி இருவரும் ஒன்றாக நடித்து இருந்தனர்.

இந்த படப்பிடிப்பின் போது கூட இருவரும் நெருக்கமாக பழகி பேசி இருந்தனராம். அதிலும் வேலராம மூர்த்தியின் தம்பியாக மாரிமுத்து இந்த படத்தில் நடித்திருக்கிறார். சொத்துப் பிரச்சனை காரணமாக பங்காளிக்குள் இடையே நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்ததால் இந்த படத்தை எடுத்து இருக்கின்றனர்.

Also Read : குணசேகரனையும், கதிரையும் அடக்கி ஆளப்போகும் ஜீவானந்தத்தின் சிஷ்யன்.. மொத்த ஆணவத்திற்கும் வச்ச வேட்டு

மேலும் இப்போது வீராயி மக்கள் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் மாரிமுத்துவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றனர். மேலும் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிமுத்துவின் கடைசி பட போஸ்டர்

Marimuthu-veerai-makkal
Marimuthu-veerayi-makkal
- Advertisement -

Trending News