Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குடி… ஹேங் ஓவர்! விஜய் சேதுபதிக்காக கவலைப்படும் ஊர் உலகம்!

‘நல்லவன் வாழ்வான். நல்லவர்களையும் வாழ வைப்பான்’ என்பதற்கு விஜய் சேதுபதியை விட்டால், வேறொரு உதாரணம் தேடி வேறெங்கும் அலையவே வேண்டாம். மனுஷன் அவ்ளோ நல்லவரு… ஆரம்பகாலத்தில் வாக்குறுதி கொடுத்த இயக்குனர்களை கூட தேடி தேடி கால்ஷீட் கொடுப்பதும், சம்பள பணத்திற்காக கறார் வசூல் நடத்தாமலும், எல்லார்க்கும் நல்லவராக இருக்கும் விஜய் சேதுபதி…. ஏன்யா இப்படியானாரு?

இதுதான் இன்டஸ்ட்ரியின் ஷாக் கேள்வி. அண்ணன் முன்பு போலில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். முன்பெல்லாம் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால், சாப்பிடுவதற்காக கூட கேரவேன் பக்கம் ஒதுங்க மாட்டார். இப்பல்லாம் அடிக்கடி கேரவேன் உள்ள போறார். வெளியே வரும்போது அவர்கள் கண்கள் சிவந்திருப்பதும் நடையில் ஒரு சின்ன மாற்றம் ஏற்படுவதும் பெரும் கவலையை அளித்து வருகிறதாக கூறுகிறது இதே ஏரியா.

உடல் எடை விஷயத்திலும் இதனால் கவனம் செலுத்த முடியாமல் போகிறது அவருக்கு. நாளுக்கு நாள் பல்கியாகிக் கொண்டேயிருக்கிறார். சினிமாவில் யார் முன்னுக்கு போனாலும், பின்னாலேயே அவரை இழுத்துக் கீழே தள்ள ஒரு சூழ்ச்சி நடக்கும். நட்பு என்ற பெயரில் அவருக்கு அந்த சூழ்ச்சி நடந்துவிட்டதோ என்றும் அஞ்சுகிறது ஏரியா.

எவ்வளவோ பெரிய மேதைகளை கூட சின்னாபின்னாமாக்கிய அந்த ‘ஐட்டம்’, தன்னை முழுசாக குடித்து தொலைவதற்குள் விழித்துக் கொள்ள வேண்டும் விஜய் சேதுபதி.

செய்வாரா… என்பதே தமிழ்சினிமாவிலிருக்கும் நல்லவர்களின் கவலை!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top