Vijaysethupathi_Gokul_Direct

நடிகர் விஜய் சேதுபதி இன்று மக்கள் செல்வன் என்று எல்லோரும் சொல்லுமளவுக்கு முன்னேறி இருக்கிறார். அவரின் நடிப்பு ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசப்படுகிறது.

இந்நிலையில், விஜய்சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது ‘கஞ்சன் ஜங்கா’ என்று பெயர் வைக்கப்போவதாக படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஜங்காவாம். படத்தில் இவர் யாருக்கும் எதுவும் கொடுக்காத மகா கஞ்சனாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பாவில் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.