fbpx
Connect with us

Cinemapettai

தொடர் தோல்விகளால் தடுமாறும் விஜய் சேதுபதி.. இந்த படமும் ஊத்திக்கிச்சு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர் தோல்விகளால் தடுமாறும் விஜய் சேதுபதி.. இந்த படமும் ஊத்திக்கிச்சு

மக்கள் செல்வன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இதற்கு முன் வெளிவந்த சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் சம்பள விஷயத்தில் முரண்டு பிடிக்கிறார் என தயாரிப்பாளர்கள் கூறியது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் திரைப்படமும் தோல்வி என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் நாடு முழுவதும் வெறும் 8 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக தெரிகிறது.

இந்த பட வெளியீட்டிற்கும் முன்னால் விஜய் சேதுபதி ஒரு விளம்பரப் படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். அது பத்தாது என்று படமும் பணப்பிரச்சனை காரணமாக ஒருநாள் தள்ளியே ரிலீஸ் ஆனது.

இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. இனி விஜய்சேதுபதி படத்தை பெரிய விலைக்கு வாங்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் சம்பளம் மட்டும் 10 கோடி வரை கேட்கிறார் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு தற்போது வரை இருந்து வருகிறது.

வில்லன் கேரக்டர்களில் நன்றாக கல்லா கட்டி வருவதால் இனி தொடர்ந்து அதையே செய்யலாம் என முடிவுக்கு வந்துள்ளார் விஜய் சேதுபதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top