Tamil Cinema News | சினிமா செய்திகள்
100 நாட்களை கடந்த 96. இயக்குனர் பிரேம்குமாருக்கு சிறிய ட்விஸ்டுடன் விஜய் சேதுபதி கொடுத்த பரிசு. வாவ் செம்ம சூப்பர்.
96
1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான் கதைக்களம். 22 வருடங்கள் கழித்து மீண்டும் துளிர்க்கும் காதல், அக்கறை என எமோஷன்களின் உச்சத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்தனர். தமிழகத்தில் ராம் மற்றும் ஜானு இன்று செல்லப்பெயர் ஆகிவிட்டது. படமும் 100 நாட்கள் கடந்த பம்பர் ஹிட்.
ரி மேக்
கன்னட சினிமாவில் இப்படத்தின் தலைப்பு 99 . படத்தை ப்ரீத்தம் குப்பி என்பவர் தான் இயக்குகிறார். ஹீரோவாக கோல்டன் ஸ்டார் கணேஷ் மற்றும் ஹீரோயினாக பாவனா நடிக்கவுள்ளனர்.

96 remake
தெலுங்கு வெர்ஷனை பொறுத்தவரை, இயக்குனர் பிரேம் குமார் தான், ஹீரோயின் சமந்தா, ஹீரோ சர்வானந்த்.
Team #96TheMovie from #100thDayCelebrationOf96 pic.twitter.com/rPJyRKlIo9
— Plumeria Movies (@plumeriamovies) February 4, 2019
தமிழில் படம் 100 நாட்கள் கடந்ததை அடுத்து பிரம்மாண்டமாக விழா எடுத்து கொண்டாடுகின்றனர் படக்குழு. சமீபத்தில் இயக்குனர் பிரேம் குமாருக்கு விஜய்சேதுபதி 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புல்லட் ( Royal Enfield Red Interceptor 650) வாங்கி பரிசாக அளித்துள்ளார். இந்த புல்லட் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது.

prem kumar 96
இதில் கூடுதல் ஸ்பெஷல் அம்சம் என்ன வென்றால் புல்லட்டுக்கு ‘0096’ என்ற பதிவு நம்பரையும் சேர்த்து வாங்கி கொடுத்துள்ளாராம் சேது.
