Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷுட்டிங் போன இடத்தில் விஜய்சேதுபதி செஞ்ச உதவி .. நெகிழ்ந்த கிராம மக்கள்
படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட கட்டிடத்தை கிராம மக்களுக்கே வழங்குமாறு விஜய்சேதுபதி கூறியுள்ளார். இதை கேட்டு கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி சுருதிஹாசனுடன் இணைந்து லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. படப்பிடிப்புக்காக விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்றை படக்குழுவினர் கட்டிடத்தைகட்டினர்.
இந்த கட்டிடத்தை அரங்காக அமைக்காமல் நிஜமான கட்டிடமாகவே கட்டி படப்பிடிப்பை நடத்தி இருக்கிறது படக்குழு. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை ஊர்மக்களுக்கே வழங்கும்படி விஜய் சேதுபதி சொல்லியிருக்கிறார். இதையடுத்து கட்டிடம் கிராம மக்களிடம் ஒப்படைப்பட்டுள்ளது.
இதற்காக கிராம மக்கள் விஜய்சேதுபதியை வெகுவாக பாராட்டினர். இந்த படம் குறித்து இயக்குனர் ஜனநாதன் கூறுகையில்.”இந்த நாட்டில் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் இப்படம் பேசப்போகிறது. இந்தியாவின் பெரும் பொருளாதாரமே விவசாய உற்பத்திதான். ஆனால் இப்போது விவசாயத்தில் நலிவடைந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை படத்தில் காட்டி உள்ளேன்.
இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சினை சர்வதேச பிரச்சினை. அதை படம் விரிவாக பேசகிறது. இதில் விஜய்சேதுபதி, சுருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு (வில்லனாக), கலையரசன், பிரித்வி, டேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்றார்.
