றெக்க படத்திற்கு பிறகு விஜயசேதுபதி நடிப்பில் புரியாத புதிர் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள கவண் மார்ச் 24-ந்தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் அடுத்தபடியாக விக்ரம் வேதா, வடசென்னை, கருப்பன், அநீதி கதைகள், 96 என பல படங்களில் நடித் துக்கொண்டிருக்கிறார். இதில், 96 படத்தில் முதன்முறையாக திரிஷாவுடன் இணையும் விஜயசேதுபதி, றெக்க படத்திற்கு பிறகு கருப்பன் படத்தில் மீண் டும் லட்சுமிமேனனுடன் இணைகிறார்.

மேலும், இதன்பிறகும் அவரை வைத்து படம் தயாரிக்க பல நிறுவனங்கள் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டு வெயிட்டிங்கில் உள்ளன. அதோடு அப்படங் களை இயக்கும் டைரக்டர்கள், முன்னணி நடிகைகளிடம் கதை சொல்லி கால்சீட் பேசி வருகின்றனர். அந்த வகையில், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு விஜயசேதுபதிக்கு படங்கள் புக்காகி விட்டதாம். அதனால், அடுத்தபடியாக அவரிடம் கதை சொல்ல சென்றால், 3 வருடங்களுக்கு கால்சீட் டைரி புல்லாகி விட் டதை முன்கூட்டியே விஜயசேதுபதிதரப்பினர் சொல்லி விடுகின்றனர். இருப்பினும், சிலர் அவர் எப்போது கால்சீட் கொடுத்தாலும் ஓகே என்று இப்போதே அட்வான்ஸ் கொடுத்து வைத்து வருகிறார்கள்.