இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ் ஹீரோவாக மாறிய பின்னர் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ப்ரூஸ் லீ படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ‛4ஜி, சர்வம் தாளமயம், அடங்காதே’ என அடுத்தடுத்த கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். இந்தப்படங்கள் தவிர்த்து ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹீரோயினாக ‛காதல் கடந்து போகும்’ புகழ் மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார். தற்போது மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தை நாம் ஏற்கனவே சொன்னது போன்று ஆரஞ்சு மிட்டாய் மற்றும் றெக்க படங்களின் தயாரிப்பாளரும், விஜய்சேதுபதியின் நண்பருமான கணேஷ் தயாரிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்கள். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் திருநாளில் வெளியிடப்பட இருக்கிறது.