Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதியின் முதல் சம்பளம் தெரியுமா? ஆச்சர்யபடாதிங்க!
படாதபாடு பட்டு முட்டி மோதி தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர் விஜய்சேதுபதி இவர் முதலில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தமிழ் சினிமாவில் நுழைந்தார் அதன் பின்புகுணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் என தனது திறமையை நிரூபித்து ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

Vijay Sethupathi Seenu Ramasamy
இவர் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது அதன்பின் வெளியான பீசா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய திரைப்படங்கள் இவரை ஒரு நிலையான ஹீரோவாக மாறினார்.
இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடிக்காமல் தனது மனதுக்குப் பிடித்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து அசத்தி வருகிறார். மேலும் இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார், பல முன்னணி நடிகர்கள் மிகப்பெரிய ஹீரோவாக ஆகிவிட்டால் வில்லனாக நடிப்பதற்கு தயங்குவார்கள் ஆனால் அந்த கதாபாத்திரத்தை கூட மிக சந்தோஷமாக நடித்து வருகிறார் இதனால் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியை பெருமளவில் பிடித்துள்ளது.
இந்த நிலையில் இன்றுகோடிகளில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி பிரபல தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார் அந்த நிகழ்ச்சியில் தான் சின்ன வயதில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து வந்துள்ளார் அதில் தனது முதல் சம்பளம் பற்றி பேசியுள்ளார் விஜய் சேதுபதி முதல் முதலாக வாங்கிய சம்பளம் 3,500 ரூபாய் என கூறினார் மேலும் விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம் என கூறியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் சம்பளம் 8 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
