fbpx
Connect with us

Cinemapettai

எல்லாத்தையும் சேர்த்து இந்த ஒரு படத்துல இருக்கு மாஸ்.. மொத்த வித்தையும் இறக்கிய விஜய் சேதுபதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எல்லாத்தையும் சேர்த்து இந்த ஒரு படத்துல இருக்கு மாஸ்.. மொத்த வித்தையும் இறக்கிய விஜய் சேதுபதி

ஒரு காலத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து விறுவிறுவென முன்னணி நடிகராக வளர்ந்து வந்தார் விஜய் சேதுபதி.

ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் அனைத்துமே சுமார் ரகமாக மாறிவிட்டது. அவருக்கு சம்பளம் கொடுத்த அளவுக்கு கூட படம் வசூல் செய்யாமல் சில படங்கள் இருப்பது வேதனை.

ஹீரோவாக மட்டும் அல்லாமல் குணசித்திர நடிகராகவும், வில்லன் வேடங்களிலும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து படங்களிலும் தொடர்ந்து அசத்தி வருவார்.

என்னதான் மற்ற கதாபாத்திரங்களில் நடித்தாலும் ஹீரோவாக கிடைத்த மரியாதையை தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அந்த வகையில் அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் க/பே ரணசிங்கம். விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். அவரின் நடிப்பும் வேற மாதிரி இருக்குமாம்.

இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் OTT தளத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ஏதோ ஒரு பக்கம், படம் ஓடினால் சரிதான் என்கிறார் விஜய் சேதுபதி. இல்லையென்றால் நிரந்தர வில்லனாக மாற்றி விடுவார்கள் என ஒருபக்கம் கவலையில் இருக்கிறாராம். இருந்தாலும் தனி ஆளாக முன்னேறியவர் மீண்டும் மிரள வைப்பார்.

Continue Reading
To Top