விரைவில் வெளிவர இருக்கிறது. ஜீவா சங்கர் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. “எமன் நான் நடிக்க வேண்டிய படம்” என்று எமன் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

ஜீவா சங்கர் எனது நீண்ட நாள் நண்பர். அவரது நான், அமரகாவியம் படங்கள் பார்த்து மிரண்டிருக்கிறேன். அமரகாவியம் படத்தை அவரைத் தவிர வேறு யாரும் எடுத்திருக்க முடியாது. அதன் கிளைமாக்ஸ் என்னை தூங்கவிடாமல் செய்தது. படத்தை பார்த்துவிட்டு ஜீவா சங்கருக்கு போன் செய்து எனக்கொரு படம் செய்து கொடுங்கள் கதை இருந்தால் சொல்லுங்கள் என்றேன்.

மறுநாளே எமன் கதையோடு வந்தார். கதையை சொன்னார் எனக்கென்றே எழுதப்பட்ட கதைபோல தெரிந்தது. நான் கண்டிப்பாக நடிக்கிறேன். இப்போதுள்ள படங்களை முடித்து விட்டு வருகிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றேன். கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு விஜய் ஆண்டனியிடம் சொல்லி அவரும் நடித்து முடித்து விட்டார்.

இப்போது படத்தின் பாடல்கள், டீசர் பார்க்கும்போது ஒரு நல்ல படத்தை தவற விட்ட வருத்தம் இருக்கிறது. ஆனால் நான் பொறாமைப்படவில்லை. என்னை விட எமன் கேரக்டருக்கு விஜய் ஆண்டனிதான் பொருத்தமாக இருக்கிறார். நான் நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு நடித்திருப்பேனா என்பது சந்தேகம்தான். இவ்வாறு அவர் பேசினார்.