fbpx
Connect with us

Cinemapettai

கேரளாவிலும் விஜய் சேதுபதி மாஸ் தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் மெர்சல் செய்யும் ரசிகர்கள். போட்டோ, வீடியோ உள்ளே.

News | செய்திகள்

கேரளாவிலும் விஜய் சேதுபதி மாஸ் தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் மெர்சல் செய்யும் ரசிகர்கள். போட்டோ, வீடியோ உள்ளே.

மக்கள் செல்வன்

கோலிவுட்டில் பிஸி நடிகர். கூத்துப்பட்டறையில் ஆரம்பித்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு ஹீரோ அவதாரம் எடுத்தவர். ஹீரோ என்று இல்லை, கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பவர். அவ்வளவு பிசியிலும் நட்பிற்காக கௌரவ ரோலில் நடிப்பது, இசை, போஸ்டர் வெளியீடு என்றும் பல ஜானர்களில் படம் நடித்து இன்று கோலிவுட்டில் மகா நடிகன் என்ற பெயர் எடுத்துவிட்டார். நடிகன் என்பதை விட துளியும் ஈகோ இல்லாத ஆசாமி. ரசிகனை ரசிப்பவர், மனிதாபிமானம் உள்ளவர்.

MAMANIDHAN

தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியின் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கன்னட படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்கிறார்கள். மலையாளத்தில் ஜெயராம் உடன் ஒரு படத்தில் இணையவும் உள்ளார்.

மாமனிதன்

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை
தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமியின் இணையும் படம் மாமனிதன். இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் அல்லேபியில் நடந்துள்ளது.

Vijay sethupathi – Manikandan Acharai

உடன் பேட்ட படத்தில் நடித்த மணிகண்டன் ஆச்சாரி இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். சிம்பிளாக வேட்டி, காக்கி சட்டையில் தான் ஷாட். எனினும் சேது அதிலும் மாஸ் தான். அங்கு சேதுவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

வழக்கம் போல துளியும் பந்தா இல்லாமல் கை அசைப்பது, செலஃபீ, முத்தம் என தன் ஸ்டைலில் அசத்தினார் இவர். 96 படத்திற்கு பிறகு இவருக்கு கேரளாவில் ரசிகர் வட்டம் அதிகமானதாக சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இதோ அதன் வீடியோ லிங்க் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top