செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நன்றி மறக்காதவர் லிஸ்டில் இருந்து விலகிய மகாராஜா.. பழக்க வழக்கத்தையெல்லாம் ஓரம்கட்டிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி கேரியரில் தி பெஸ்ட் திரைப்படமாக அமைந்தது மகாராஜா திரைப்படம். இந்த படம் அவருக்கு நல்ல பெயர் புகழ், அந்தஸ்த்து, சம்பளம் என்று அனைத்தையும் ஏற்றிக்கொடுத்தது. இந்த நிலையில், சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு தொகுத்து வழங்குவதில் ஈடுபாடு காட்டிக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக சினிமா துறையில், ஒரு கட்டத்துக்கு உயர்ந்த பிறகு, வந்த பாதையையும், கை கொடுத்து தூக்கி விட்டவரையும் மறந்து விடுவார்கள். அதில் விதிவிலக்காக இருந்தது விஜய் சேதுபதி தான். ஆனால் தற்போது அவரும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். விஜய் சேதுபதி தற்போது ட்ரெயின் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஓரம் கட்டிய விஜய் சேதுபதி

பொதுவாக விஜய் சேதுபதி, தான் கடந்து வந்த பாதையை மறக்காதவர். தன்னை ஆரம்பத்தில் தூக்கி விட்ட இயக்குனர்களாக படம் ஒன்றை சம்பளம் வாங்காமல் கூட நடித்து கொடுப்பவர். ஆனால் தற்போது மகாராஜா படத்தின் வெற்றி, விஜய் சேதுபதியை மாத்திவிட்டது.

விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தற்போது சீனாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மறுபுறம் அடுத்தாக விடுதலை 2 படம் வெளியாகஉள்ளது. இந்த நிலையில், இனி நல்ல கதைகளை தேர்வு செய்து சிறந்த படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று அதிரடி முடிவு எடுத்துவிட்டார்.

மேலும் இனி பழகிய பழக்கத்துக்காக படம் பண்ணுவது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். எப்படி இனி, தான் வில்லனாக நடிக்கப்போவதில்லை என்பதை கறாராக கூறினாரோ, அதே போல இனி, கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால் மட்டும் தான் படம் பண்ணுவேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இது இவரை ஆரம்பகாலத்தில் உயர்த்திவிட்ட ஒரு சில இயக்குனர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

- Advertisement -

Trending News