ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கரும்பு திங்க கூலி வேணுமா.? மொத்த காசையும் வாரித் துன்ன விஜய்சேதுபதி

ஹீரோவாக பல படங்களில் நடித்ததை விட வில்லனாக தளபதி விஜய்யின் மாஸ்டர், அதை தொடர்ந்து, சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் என தமிழ் சினிமாவின் எதிர்மறை கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தற்போது மவுசு கூடியிருக்கிறது.

இவரை வில்லனாக வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழ் தெலுங்கு களில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதனால் விஜய் சேதுபதி தமிழில் வில்லனாக நடிக்க 15 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்.

இப்படி தமிழ், தெலுங்கு படங்களில் மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டப் போகிறார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் ஹிந்தி படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியை கேட்டிருக்கின்றனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஜவான் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் ரெட் சில்லி தயாரிப்பு நிறுவனம் விஜய்சேதுபதியை அணுகி, உங்களுக்கு சம்பளம் 25 கோடிகள் தருகிறோம். நீங்கள் வில்லனாக நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கின்றனர்.

ஷாருக்கானுடன் இந்தியில் நடிப்பதே ஒரு பெரிய விஷயம். கரும்பு தின்னக் கூலியா என்று எண்ணாமல் எனக்கு 30 கோடி கொடுங்கள் நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார் விஜய் சேதுபதி. அவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் உடனே ஒப்புக் கொண்டுள்ளனராம்.

படத்தின் பட்ஜெட்டில் ஒரு பங்கை வாரி கொண்டார் விஜய் சேதுபதி. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதனால் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும் விஜய் சேதுபதி கூடிய விரைவில் தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக மாற்றிவிடுவார் போல தெரிகிறது.

- Advertisement -

Trending News