விஜய் சேதுபதி – ரேனிகுண்டா பன்னீர் செல்வம் இணையும் புதிய படத்துக்கு கருப்பன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டு மட்டும் 6 படங்களில் நாயகனாக நடித்து சாதனைப் படைத்தார்.

இந்த 2017-லும் இவரது ஆதிக்கம் தொடர வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டுக் கணக்கை தனது ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்குப் பிறகு கே. வி. ஆனந்தின் இயக்கத்தில் ‘கவண்’ படமும் வெளி வரவிருக்கிறது. அதன் பிறகு மாதவனுடன் இனைந்து நடித்திருக்கும் ‘விக்ரம் வேதா’ படம் வரவிருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்து ‘ரேணனிகுண்டா’ புகழ் பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘கருப்பன்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்துக் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி இமான் இசையமைக்கிறார்.

ஜனவரி 11-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.