Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜூங்கா படத்தில் போயட்டு தினேஷ் – தனுஷ் அவர்களை கிண்டல் செய்யும் நோக்கம் இல்லை : விளக்கம் அளித்த விஜய் சேதுபதி.
ஜூங்கா.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். யோகி பாபு காமெடியில் கலக்கியுள்ளார். டட்லி ஒளிப்பதிவு. சாபு ஜோசப் எடிட்டர். இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசை.
லோலிகிரியா

JUNGA
இப்படத்தில் இந்த ஒரு பாடல் உள்ளது . மேலும் இப்பாடலை பாடி ஆடும் கதாபாத்திரத்தின் பெயர் போயட்டு தினேஷ். பலரும் விஜய் சேதுபதி தனுஷை தான் மறைமுகமாக தாக்குவதாக கிசு கிசுத்து வந்தனர். இந்நிலையில் விஜய் சேதுபதி பிரபல நாளிதழ் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
“நான் நடிகர் தனுஷ் அவர்களை கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை; தேவையுமில்லை. அப்படி எந்த உள்நோக்கமும் இல்லை. தனுஷ் தன்னை நிரூபித்து தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தவர். மிக முக்கியமான நடிகர். தன்னை எல்லாத் தளங்களிலும் நிரூபித்த திறமைசாலி. அவர் எனக்கு சீனியர்.” என்று கூறி உள்ளார்
