சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

பவானியை மறக்கச் செய்யும் சந்தானம்.. சம்பவம் செய்யும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் சமீபகாலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஹீரோ என முத்திரை பதித்த ஒரு நடிகர் தன்னை வில்லனாக காட்டிக்கொள்ள பயப்படுவார்கள். ஆனால் ஹீரோவாக ரசிகர்களின் மனதை வென்ற விஜய் சேதுபதி தற்போது வில்லனாக மிரட்டி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பவானியாக விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கமலஹாசன் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ்க்கு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்சேதுபதிக்கு இருந்துள்ளது.

மேலும் விக்ரம் படத்தில் தான் நடிக்க விரும்புவதாக லோகேஷ் இடம் விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். முதலில் மறுத்த லோகேஷ் பின்பு விஜய் சேதுபதியை விக்ரம் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் ஆரம்ப காட்சியே அசத்தலாக உள்ளது. மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி என மூன்றும் மனைவிகளுடன் இருக்கும் விஜய் சேதுபதி கஞ்சா வியாபாரியாக உள்ளார். கமலின் பழைய விக்ரம் படத்தில் சத்யராஜ் அணிந்திருக்கும் வித்தியாசமான மூக்கு கண்ணாடியை போலவே இப்படத்திலும் விஜய் சேதுபதி அணிந்துள்ளார்.

மேலும் கமலுடன் சண்டை காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயமல்ல. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக போகும் அந்த சண்டை காட்சியில் விஜய் சேதுபதி தும்சம் செய்துள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரம் மாஸ்டர் பவானியை மறக்கச் செய்யும் அளவிற்கு உள்ளது.

மேலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு சரியான தீனி போட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி தொடர்ந்து இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். விக்ரம் படத்தின் வெற்றிக்கு விஜய்சேதுபதியின் நடிப்பும் வலு சேர்த்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News