இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதி தான். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் எட்டு திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தற்போது இவருக்கு போட்டியாக நடிகை சாந்தினியும் களத்தில் குதித்துள்ளார். இதுவரை இவர் சித்து ப்ளஸ் டூ, நான் ராஜாவாக போகிறேன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தற்போது வில் அம்பு, நையப்புடை என ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகவுள்ளது.