fbpx
Connect with us

பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது குத்தமா? விளக்கத்துடன் மன்னிப்பை கேட்ட விஜய் சேதுபதி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது குத்தமா? விளக்கத்துடன் மன்னிப்பை கேட்ட விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி இன்று தமிழக மக்களின் மனதில் தனக்கென சிம்மாசனம் அமைத்து ராஜாவாக அமர்ந்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். தமிழ் சினிமா என்ற லிமிட்டை கடந்துவிட்டார் மனிதர். நடிப்பு அரக்கன், சூறாவளி, சுனாமி என அடுக்கிக்கொண்டே போகலாம். போராடி தனக்கென்ற இடத்தை பிடித்தவர்.

பிரபலமாக இருந்தாலே பிரச்னை தான், அவர்கள் எது செய்தாலும் அதில் குறை கண்டு பிடிக்க ஆர்வதோடு கிளம்பிவிடுவர் பலர். சமீபத்தில் இது போல பலரும் போர் கொடி பிடிக்க, முரளிதரனின் பயோபிக் படத்தை விட்டு விலகினார். இது நாம் அறிந்ததே.

இந்நிலையில் சேது தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடினார். படப்பிடிப்பு தளத்தில் பட்டாக் கத்தி வைத்து கேக் வெட்டி கொண்டாடினார். சமூகவலைதளங்களில் ரவுடிகள் பட்டாக்கத்தி கேக் வெட்டிய போது கைது செய்யும் போலீசார் ஒரு முன்னணி நடிகர் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் போது அதே போன்ற நடவடிக்கை எடுப்பார்களா என பேச ஆரம்பித்தனர். மேலும் இவரை பின்பற்றி ரசிகர்களும் இதே போல் கேக் வெட்ட துவங்கினால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

vijay sethupathi cake

இந்நிலையில் இந்த சம்பத்திற்கு விளக்கம் தந்துள்ளார் சேது. ”எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். அடுத்து பொன்ராமின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என சொல்லியுள்ளார்.

Continue Reading
To Top