Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதி வாங்கிய பிரம்மாண்ட வீடு.. இனி ரசிகர்கள் இவரை இந்த ஏரியாவில் பார்க்கலாம்

vijaysethupathi-house

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி வாங்கிய பிரம்மாண்ட வீடு.. இனி ரசிகர்கள் இவரை இந்த ஏரியாவில் பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் எப்போதுமே மினிமம் கேரண்டி என்ற பெயர் வாங்குவது நடிகர்களுக்கு மிகவும் கடினம். அதை தனது தொடர் வெற்றிகளால் உறுதி செய்தவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் துணை நடிகராக நடித்தார்.

கார்த்தி நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்தியிடம் கடன் கேட்கும் காட்சியில் வந்து செல்வார். அதன்பிறகு இவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் வித்தியாசமான கதையம்சத்துடன் வெளிவந்து ஹிட்டடித்தது.

சூது கவ்வும் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டது என்று சொல்லலாம். அந்தளவு ஹிட்டடித்து மினிமம் கேரண்டி ஹீரோ என்ற அந்தஸ்தை வழங்கியது. பின்னர் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறியது.

ஆனால் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் எப்படியாவது ஒரு பெரிய வெற்றி கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தற்போது செயல்பட்டு வருகிறார். தளபதி 64 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி பெரிய அளவில் சம்பளம் பேசி உள்ளார்.

உழைப்பால் உயர்ந்த இவர், தற்போது சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். பொதுவாக நடிகர்கள் சென்னைக்கு வெளியில்தான் வீடு வாங்க ஆசைப்படுவார்கள்.

ஆனால் இவரோ நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் எப்பொழுதும் உறவில் இருக்க வேண்டும் என்பதற்காக சிட்டிக்குள் வீடு வாங்கியதாக குறிப்பிட்டுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top