மாஸ்டர் பவானிக்கு வாழ்த்து கூறிய விஜய் சேதுபதி புகைப்படம்.. இதுதான் என் சொத்து என மகிழ்ந்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் நாட்டாமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மகேந்திரன். விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சார கண்ணா மற்றும் ரஜினியுடன் படையப்பா போன்ற தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரங்கள் படங்களில் சிறுகுழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரிடமும் மிகப்பெரிய பாராட்டை பெற்றார். தற்போது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் சேதுபதி மாஸ்டர் மகேந்திரன்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இதனை பார்த்த மகேந்திரன் என் வாழ்நாளிலேயே எனக்கு மிகப்பெரிய சொத்தாக கிடைத்துள்ளது உங்களுடைய அன்பு வாழ்த்து தான் என்று மகிழ்ச்சியுடன் தன் அன்பை விஜய்சேதுபதிக்கு வெளிப்படுத்தியுள்ளார்

mahendran vijay sethupathi
mahendran vijay sethupathi

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகேந்திரனுக்கு  வாழ்த்து கூறி வருவது மட்டுமின்றி மாஸ்டர் படத்தில் இவரது நடிப்பை பற்றி வெகுவாக பாராட்டியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மாஸ்டர் மகேந்திரன்க்கு சினிமா பேட்டை சார்பாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement Amazon Prime Banner