மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இன்றைய தேதியில் நம் கோடம்பாக்கத்தில் அனைவரின் பாவேரிட் இவர் தான். ஆன்- ஸ்க்ரீன்  என்பதை தாண்டி, தன் எளிமையான தோற்றம், தன் ரசிகர்கள் மேல் கொண்ட பிரியம், செய்யும் காரியங்கள் என்று அணைத்து வகையிலும் பலரது கவனத்தையும் பெற்றவர்.

Vijay Sethupathi

இவர் தன் ரசிகர்கள் மேல் என்றும் தனி பிரியம் வைத்திருப்பவர். ஜனவரி 16 இவரின் பிறந்தநாள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டுவது, படத்தின் போஸ்டர் ரிலீஸ் என்று கலை கட்டியது இவரின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

vijay sethupathi Birth Day

இது ஒரு புறம் இருந்தாலும் தன் பிறந்த நாள் அன்று தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் அதே போல் தன் ரசிகர்களை கண்டு அவர்களுடன் உரையாடி போட்டோக்களும் எடுத்துக்கொண்டார்.

vijay sethupathi

அப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர் இவரை மீட் செய் வந்திருந்தார், அந்த நபரை கட்டித்தழுவி, முத்தமிட்டு அவருடன் செலஃபீயும் எடுத்தார் விஜய் சேதுபதி.

vijay sethupathi
vijay sethupathi

இந்த செயலை பார்த்த பலரும் சொல்வதற்கு வார்த்தைகள் இன்றி கண் கலங்கினர்.

விஜய் சேதுபதி இருக்கும் பிஸிக்கு நன்றியை வீடியோ வாயிலாக கூட தெரிவித்திருக்கலாம். தன் ரசிகர்களை மீட் செய்து அவர்களுடன் டைம் ஸ்பென்ட் பண்ணியது தான் இவர் எப்படி பட்ட குணாதிசயத்தை கொண்டவர் என்று நமக்கு இவரை அடையாளம் காட்டுகிறது.

Makkal Selvan

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

நாடி, நரம்பு, சதை, இரத்தம் அனைத்திலும் தன் ரசிகன் மேல் பாசம் உள்ள ஒரு நடிகனால் மட்டும் தான் இப்படி செய்ய முடியும். சினிமா பேட்டை உங்களை தலை வணங்குகிறது ப்ரோ.