சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி.. என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

தமிழில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது கைவசம் அதிகப் படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த நிகழ்ச்சி குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “நான் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரூபாய் 750 சம்பளத்துக்கு வேலை செய்தேன். இரவு 7.30 மணி முதல் 12.30 மணி வரை அங்கு வேலை செய்வேன். அதுமட்டுமல்லாமல் நான்கு மாதங்கள் டெலிபோன் பூத்தில் வேலை செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இது போன்ற சாதாரண வேலைகளில் இருந்து கஷ்டப்பட்டு தங்கள் திறமையால் முன்னுக்கு வந்துள்ளனர். உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கூறலாம்.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai

சாதாரண கண்டக்டராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை